Latestமலேசியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  moratorium சலுகை – SME வங்கி

கோலாலம்பூர், ஜன 14  – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும்  தனது வாடிக்கையாளர்கள் திரும்ப கடனைச் செலுத்துவதை, SME வங்கி மேலும் ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார ஆற்றலை மீண்டும் வலுப்படுத்திக் கொள்ள, போதிய கால அவகாசத்தைப் பெற்றிருப்பதற்காக, அந்த  சலுகை வழங்கப்பட்டிருப்பதாக  தொழில்முனைவர் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர்  டத்தோ ஶ்ரீ  டாக்டர் வான் ஜுனாய்டி  துவாங்கு ஜாஃபார் தெரிவித்தார்.

வெள்ளத்தாலும், கோவிட் பெருந்தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ள  சிறு நடுத்தர தொழில்முனைவர்களுக்கு  உதவ  SME வங்கி பல்வேறு உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள், தங்களது வர்த்தகத்தை சீரமைப்பதற்கான ஆலோசனைகளையும், பயிற்சித் திட்டங்களையும், SME வங்கி வழங்குவதாக அதன் தலைவர்  ஆரியா புத்ரா இஸ்மாயில் (Aria Putera Ismail)  தெரிவித்தார்.

SME வங்கியின் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகையைப் பெற , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  தொழில்முனைவர்கள் , விரைந்து தத்தம் தொடர்பு பிரிவு நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள  வேண்டும். எனினும் அந்த சலுகை நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!