Latestஉலகம்விளையாட்டு

வெஸ்ட் ஹேம் நிர்வாகி மோயெஸுக்கும் இரு ஆட்டக்காரர்களுக்கும் கோவிட்-19 !

லண்டன், செப் 23 – இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிளப்பான வெஸ்ட் ஹேம் (West Ham) நிர்வாகி டேவிட் மோயெஸ் (David Moyes)சுக்கும் அணியின் மேலும் இரு ஆட்டக்காரர்களுக்கும் கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

தற்காப்பு ஆட்டக்காரர் இசா டியோப் (Issa Diop), மத்திய திடல் ஆட்டக்காரர் ஜோஸ் கல்லென் (Josh Cullen) ஆகியோரே நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கும் வெஸ்ட் ஹேம் ஆட்டக்காரர்கள் ஆவர். ஹல் சிட்டி (Hull City)க்கு எதிரான லீக் கிண்ண ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையின் போது அம்மூவருக்கும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்ததாக கிளப் கூறியது.

இதனை அடுத்து நிர்வாகி டேவிட் மோயெஸும் அவ்விரு விளையாட்டாளர்களும் உடனடியாக திடலில் இருந்து வெளியேற்றப்பட்டு, தத்தம் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டனர்.

பின்னர் அவ்வாட்டம் வெஸ்ட் ஹேம் உதவி நிர்வாகி எலென் இர்வீன் (Alan Irvine) தலைமையின் கீழ் நடத்தப்பட்ட வேளையில், அதில் வெஸ்ட் ஹேம் 5-1 என ஹல் சிட்டியைப் பந்தாடியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!