
கோலாலம்பூர், பிப் 23- நேற்று மாலை, பூச்சோங், கின்ராரா பகுதியில் வேன் ஒன்றை மோதித் தள்ளி, அந்த வாகன ஓட்டுனருக்கு படுகாயத்தை விளைவித்த மைவி கார் ஓட்டுநரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேகமாகவும், ஆபத்தான முறையிலும் செலுத்தப்பட்ட மைவி காரால் மோதப்பட்டு வேன் ஒன்று விபத்துக்குள்ளான காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தது.
அந்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு நேற்று மாலை மணி 2.40க்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் போக்குவரத்து அமலாக்க விசாரணை துறையின் தலைவர் அஸ்மான் ஷாரியாட் ( Azman Shari’at) தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயன்ற மைவி ஓட்டுநரைப் பொது மக்கள் சேர்ந்து பிடித்தனர். பின்னர் அந்த ஆடவனைப் போலீசார் கைது செய்து விசாரணைக்காக செர்டாங் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இவ்வேளையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேன் ஓட்டுநர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.