Latestமலேசியா

வேலையை அதிகம் நேசித்த இளம் தாதி முகிலரசி கோவிட் தொற்றால் மரணம் 

கோலாலம்பூர், ஜூன் 7 – கோவிட் -19 தொற்றால்,  இளவயதான  தாதி முகிலரசி பெருமாள் மரணமடைந்திருப்பது தொடர்பில், உண்மைக்குப் புறம்பான  தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாமென, அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்துடன், துயரத்தில் இருக்கும் தங்களைத் தற்போதைக்கு தொலைபேசியில் அழைத்து மேலும் சங்கடமான ஓர் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டாமெனவும், உயிரிழந்த முகிலரசியின்  சகோதரி லாவண்யா கேட்டுக் கொண்டார்.

லாவண்யாவை வணக்கம் மலேசியா தொடர்பு  கொண்டபோது, தனது  தங்கை, வயிற்று  வலியின் காரணமாக, அம்பாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அதற்குப் பின்னர் கோவிட் தொற்றின் பாதிப்பினால்  உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.

26 வயதான முகிலரசி , கடந்த மூன்றாண்டுகளாக, சிலாங்கூர்  சுங்கை பூலோ மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில் வேலை செய்து வந்தார்.

ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியான  தனது  தங்கை  விடுமுறை கூட எடுக்க விரும்பாதவர்;  கடமையுணர்வுடன்  தனது வேலையை மிகவும் நேசித்து செய்தவர்  என லாவண்யா குறிப்பிட்டார்.

இம்மாதம் ஐந்தாம் தேதி உயிரிழந்த முகிலரசியின் உடல் ,  நேற்று அம்பாங் மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, செராஸ் ஜாலான் குவாரியில் (Jalan  Kuari-யில் உள்ள மின் சுடலையில் தகனம் செய்யப்பட்டது.

கோவிட் -19 யாரையும் அடையாளம் காணாது. நாமும் நமது அன்புக்குரியவர்களும் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதை  உறுதி செய்வது  நமது கடமையாகும். அதே வேளை கோவிட் தொற்றால் அன்புக்குரியவர்களை இழக்கும் குடும்பத்தினர்  வேதனைப்படும் வகையில் தவறான தகவல்களைப் பகிரும் பொறுப்பற்ற  செயலையும் மக்கள்  தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவரின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
முகிலரியின் மரணச் செய்தி சமூகவலைத்தளங்களில் நேற்று முதல் மிகவும் பரவலாக பகிரப்பபட்டது. பலர் அனுதாபம் தெரிவித்திருந்தாலும் சிலர் மரணத்தின் காரணம் தொடர்பில் பல்வேறான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!