Latestமலேசியா

ஷா ஆலாமில் 1 வயது பெண் குழந்தை சித்தரவதை; இந்தோனேசிய பணிப்பெண் கைது

ஷா ஆலாம், ஆகஸ்ட் 1 – கிள்ளான், தாமான் கிள்ளான் பெர்டானா அருகே, 1 வயது பெண் குழந்தை சித்தரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தோனேசிய பணிப்பெண் ஒருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
கடந்த புதன்கிழமை சம்பந்தப்பட்ட அந்த 30 வயது இந்தோனேசிய பணிப்பெண் அவர் வேலை செய்யும் வீட்டில் இக்கொடூரச் செயலை புரிந்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் நூருல் ஹுடா முகமட் சாலே தெரிவித்தார். அச்சமயம் அப்பெண் குழந்தையை சுடுநீரில் குளிக்க வைத்து கொண்டிருந்தார். அப்போது, குழந்தை வீரிட்டு அழும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது குழந்தை உடலின் பின் மற்றும் தொடை பகுதிகளில் வெந்து காணப்பட்டதாக அக்குழந்தையின் பாட்டி தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்த அந்த இந்தோனேசியப் பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சம்பந்தப்பட்ட வீட்டில் அந்த பணிப்பெண் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் தனக்கு அங்கு வேலை செய்ய விருப்பம் இல்லை என்றும்; மீண்டும் இந்தோனேசியாவிற்கு திரும்ப வேண்டும் என்பதால் அப்பெண் இவ்வாறு செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் வீட்டு உரிமையாளருடன் எந்த ஒரு பிரச்சனையும் அப்பணிப் பெண்ணுக்கு இல்லையென்றும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேல் விசாரணைக்காக போலீசர் அப்பெண்ணை 4 நாட்கள் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!