Latestமலேசியா

ஸ்னூக்கர் மையம் என்ற பெயரில் இணையச் சூதாட்டம்

செர்டாங், நவ 22- ஶ்ரீ கெம்பாஙானில் , ஸ்னூக்கர் மையத்தில், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு  வந்த இணையச் சூதாட்ட  நடவடிக்கையை, போலீசார் முறியடித்தனர்.

போலீஸ் கண்காணிப்பைத் தவிர்க்க, ‘’பணியாளர்களுக்கு மட்டுமே’’ எனும் குறிப்பை ,  அந்த மோசடி கும்பல்  கடையின் முன் வைத்திருந்ததாக, செர்டாங் துணை ஆணையர் ரசாலி அபு சமா தெரிவித்தார்.

எனினும், மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வந்த அந்த சூதாட்ட மையத்தை நேற்று இரவு மணி ஒன்பதுக்கு சோதனையிட்டதாகவும், மூன்று பெண்கள் உட்பட  எண்மர் கைது செய்யப்பட்டதாகவும், ரசாலி அபு சமா கூறினார்.

அந்த சோதனை நடவடிக்கையின் போது,  14 மடிக் கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசாரின் வருகையைக் கண்டறிய,  வர்த்தக தளத்தின்  பல்வேறு இடங்களில் ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மடிக்கணினியின் வாயிலாக, அந்த சூதாட்ட கும்பல், நடமாட்டத்தைக்  கண்காணித்து வந்துள்ளது. கடந்த செப்டம்பர் 18 – ஆம் தேதி முதல் அந்த கும்பல், அப்பகுதியில் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!