
கோலாலம்பூர், பிப் 23 – ஹோட்டல்கள் அல்லது தங்கும் விடுதிகள் செயல்படுவதை நிறுத்தும்படி அரசாங்கம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. MCO அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களில்கூட ஹோட்டல்களில் தஙகளது உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்யும் மையங்கள் செயல்படுவதற்கும் அங்கு உணவருந்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடுமையாக்கப்பட்ட மற்றும் மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களிலும்கூட சுற்றுலா துறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.