Latestஉலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்; விவேக் ராமசாமி விலகல்

வாஷிங்டன் , ஜன 16 – அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதிலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி விலகிக் கொண்டார். மேலும் இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்லில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்கிற்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக காகசஸ் என்ற மாநில அளவிலான உள்கட்சி தேர்தல் பாரம்பரியமாக அயோவா மாநிலத்தில் தொடங்கியது. அந்த மாநிலத்தில் தொடக்கக் கட்ட முடிவுகளில் டொனால்டு டிரம்ப் 51 விழுக்காட்டிற்கும் மேல் வாக்குகளைப் பெற்றார். இதன்வழி அவர் அயோவா மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளார். 7 விழுக்காடு ஆதரவை மட்டுமே பெற்ற தாம் அதிபர் பதவிக்கான வேட்பாளராக நிற்கும் முடிவை மாற்றிக் கொண்டதாக டெஸ் மொயின்ஸ்சில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் விவேக் ராமசாமி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!