
கோலாலம்பூர், அக் 5 – 1 Utama பேரங்காடியின் இரண்டாவது மாடியில் உள்ள மேக் சிட்டி செர்விஸ் செண்டர் (Mac City Service Centre) கடை ஊழியர் ஒருவருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
அந்த ஊழியர் தற்போது அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக 1 Utama பேரங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, தாங்கள் பல முயற்சிகளை எடுத்திருந்த சமயத்தில், இச்செய்தி தங்களுக்கு உண்மையிலேயே வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக 1 Utama கூறியது.
நோய்த் தொற்று ஏற்பட்ட ஊழியருடன் தொடர்பில் இருந்துள்ள அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், வாடிக்கையாளர் சேவைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதாகவும் அது அறிக்கை வழி தெரிவித்தது.
அதோடு, மின்தூக்கி, கழிவறைகள், பொது இடங்கள் என பேரங்காடியின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி திரவத்தைக் கொண்டு சுத்தப்படுத்தும் படுத்தும் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் 1 Utama கூறியது.