Latestஉலகம்

12 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய சில்லரை காசு; பெற்றோர் தற்கொலை

புதுடில்லி, அக் 17 – கோவிட்-19 தாக்கத்தினால் தனது வெற்றிலை வியாபாரத்தில் பெருமளவு நஸ்டத்தை எதிர்நோக்கிய ஆடவர் ஒருவர், தனது மனைவியுடன் இரயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன்பு, தனது 12 வயது மகனை உடன் தற்கொலை செய்ய வைப்பதாக இல்லையா என்பதை சில்லரை காசை மேலே தூக்கி போட்டு முடிவு செய்துள்ளனர் அந்த தம்பதியர்.

அதிர்ஸ்டவசமாக, அந்த சில்லரை காசு அவனுக்கு சாதகமாக விழவே உயிர் பிழைத்துள்ளான் அச்சிறுவன். இச்சம்பவம் இந்தியா புதுடில்லி, பீகார் எனுமிடத்தில் நிகழ்ந்துள்ளது.
இரயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பாக, அந்த ஆடவன், தனது மகனுக்கு 30 ரூபாயைக் கொடுத்துவிட்டு எப்படியாவது பிழைத்துக் கொள் என கூறியுள்ளார்.

பின்னர் அச்சிறுவனின் கண் முன்னே அவ்விருவரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். அழுதுக் கொண்டே ஊரினுள் சென்ற அச்சிறுவனிடம் விசாரித்த போது இச்சம்பவம் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!