Latestமலேசியா

12 வயது வளர்ப்பு மகளை கற்பழித்த குற்றத்திற்காக 1,050 ஆண்டு சிறை; ஆடவர் மேல் முறையீட

கோலாலம்பூர், பிப் 23- தனது 12 வயது வளர்ப்பு மகளை கற்பழித்த குற்றத்திற்காக 1,050 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஆடவர் தனக்கு எதிரான குற்றம் மற்றும் தண்டனைக்கு எதிராக காஜாங் சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியோடு மேல் முறையீடு செய்துள்ளார்.

கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதியின் எழுத்துப் பூர்மான தீர்ப்பு கிடைத்த பின்னர் மேல் முறையீட்டுக்கான நடைமுறை மற்றும் விசாரணை நடைபெறும் என வழக்கறிஞர் வி.விமல் அரசன் கூறினார். மேல் முறையீட்டு விசாரணை கிள்ளான் உயர்நீதிமன்றத்தில் நடைபெறுவதற்கு ஷா அலாம் உயர்நீதிமன்ற நீதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என விமல் அரசன் தெரிவித்தார்.

20 வயதுக்குட்பட்ட அந்த ஆடவனை இன்று சிறைச்சாலை அதிகாரிகள் ஷா அலாம் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர். அந்த நபருக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஊடகங்களில் பரவலாக தகவல் வெளியானதை தொடர்ந்து அந்த தீர்ப்பை மறுசீரமைப்பதற்காக மனுவை வழக்கறிஞர் கா, ராமு கடந்த மாதம் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 105 முறை தனது வளர்ப்பு மகளை அந்த நபர் கற்பழித்துள்ளார் என்று குற்றம் நிருபிக்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு குற்றத்திற்கும் 10 ஆண்டு சிறை என்ற அடிப்படையில் 105 குற்றங்களுக்கு 1,050 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்,குணசுந்தரி தீர்ப்பளித்திருந்தார். அதோடு அந்த நபருக்க 24 பிரம்படி விதிப்பதாகவும் நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டபோது அந்த நபர் வழக்கறிஞர் எவரையும் நியமிக்கவில்லை.

சிறைச்சாலை அதிகாரிகள் அந்த நபருக்காக மேல் முறையீடு செய்துள்ளனர். அவருக்காக நாங்கள் மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகியுள்ளோம் என ராமுவுக்கு உதவியாக இருந்துவரும் வழக்கறிஞர் விமல் தெரிவித்தார். கடநத 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதிக்கும் 2020 பிப்ரவரி 24 ஆம் தேதிக்குமிடையே சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஒரு வீட்டில் அந்த நபர் இந்த குற்றத்தை புரிந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை அல்லது 30 ஆண்டுளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனை மற்றும் பிரம்படியை கற்பழிப்பு குற்றத்திற்கு தண்டனைச் சட்டத்தின் செக்சன் 376 பி அனுமதிக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 1,050 ஆண்டுகள் சிறைத் தண்டனை அபத்தமானது என அவரது வழக்கறிஞர்களில் ஒருவர் வர்ணித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!