Latestமலேசியா

15ஆவது பொதுத் தேர்தல்: 50% புதுமுகங்களை ம.இ.கா களமிறக்கும்

மலாக்கா தெங்கா, செப் 22 – 15ஆவது பொதுத் தேர்தலில் களமிறக்கப்படும் ம.இ.கா வேட்பாளர்களில் ஏறக்குறைய 50 விழுக்காட்டினர் புது முகங்களாக இருப்பர் என ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

ம.இ.காவைப் பிரதிநிதித்து, தேர்தலில் களமிறங்கத் தேர்வு செய்யப்படும் அப்புதுமுகங்கள், Perikatan Nasional எனும் தேசிய கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தரக்கூடிய ஆற்றல்மிக்க இளம் தலைமுறையினராக இருப்பார்கள் என டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
இந்திய வாக்காளர்களின் ஆதரவைத் திரும்பப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் ம.இ.காவில் இம்மாற்றம் செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இதன் தொடர்பில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனக் கூறிய டத்தோஸ்ரீ சரவணன், நடப்பு அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப, புதுமுகங்களை வேட்பாளர்களைக் களமிறக்குவது பற்றி விரிவாகக் கலந்து பேசி, ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்றார்.
அதோடு, பொதுத் தேர்தலில் ம.இ.கா சார்பில் நிறுத்தப்படும் புது முகங்கள், இந்நாட்டில் இந்திய சமுதாயத்தின் மேன்மைக்குப் பாடுபடக்கூடிய துடிப்புமிக்க இளைஞர்களாக இருப்பதையும் கட்சி உறுதிச் செய்யும் என டத்தோஸ்ரீ சரவணன் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!