Latestமலேசியா

தொகுதிகளை தற்காத்துக்கொள்வதற்காக முவாபாக்காட்டில் இணையாதீர்கள் – காலிட் நோர்டின்

கோலாலமபூர், ஆக 16- முவாபாக்காட் கூட்டணியின் நோக்கத்தை அனைத்து உறுப்புக் கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என அம்னோவின் உதவித் தலைவர் காலிட் நோர்டின் தெரிவித்தார். அந்த தேசிய கூட்டணியில் சேர்ந்துகொள்வதற்கு பெர்சத்து கட்சி ஆர்வமாக இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான முஹிடின் யாசின் கூறியிருந்தார்.

இதனை வரவேற்ற காலிட் நோர்டின் முவாபாக்காட் கூட்டணியில் இணையும் கட்சிகள் உண்மை மற்றும் புரிந்துணர்வுடனும் இருக்க வேண்டும் என வலியிறுத்தினார். அம்னோ மற்றும் பாஸ் கட்சியை இணைக்கும் கூட்டணிதான் முவாபாக்காட். நிலையான தேசிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்காக மலாக்காரர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் இது திகழ்கிறது.

தொகுதிகள் மற்றும் பதவியை தற்காத்துக்கொள்வதற்காக முவாபாக்காட் கூட்டணியில் இணைந்துகொள்ளலாம் என்ற தவறான சிந்தனை இருந்தால் அதனை அரசியல் கட்சிகள் அடியோடு மறந்துவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே முவாபாக்காட் கூட்டணியில் இணைவதற்கு முன் கிளை மற்றும் டிவிசன் ரீதியில் அதன் அடிப்படை கட்டுமானத்தை பெர்சத்து வலப்படுத்த வேண்டும் என சில அம்னோ தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போன்று கண்ணை மூடிக்கொண்டு தொகுதிகளை கேட்கும் போக்கையும் பெர்சத்து தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஜோகூர் மாநிலத்தை சேர்த்த சில அம்னே தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!