Latestமலேசியா

2 மாதம் வேலை இல்லை – மன அழுத்தம்; இந்திய விமானி தற்கொலை

செர்டாங், ஆக 5 – கோவிட்-19 தாக்கத்தால் பலர் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நிலையில், வேலை இழந்து அதனை சமாளிக்க முடியாமல் பலர் தற்கொலை செய்து கொள்வது மனதை களங்கடிக்கச் செய்கிறது. இந்நிலையில் ஏர் ஏசியாவில் விமானியாக பணிபுரிந்து வந்த இந்திய ஆடவர் ஒருவர் வேலை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை 3.10 மணியளவில் 35 வயது, ஏ. சஞ்சீவ் தேவன் என்பவர் பூச்சோங்,பண்டார் கின்ராரா அடுக்குமாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாக செர்டாங் மாவாட்ட போலீஸ் தலைவர் இஸ்மாடி பொர்ஹான் தெரிவித்தார்.

ஆர் ஏசியாவில் விமானியாக பணிபுரிந்து வந்த சஞ்சீவ், கடந்த 2 மாத காலமாக வேலை இழந்து, வருமானமின்றி மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் அந்த மன அழுத்தத்தைத் தாங்க முடியால் தற்கொலை செய்துக் கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் குற்ற அம்சங்கள் ஏதும் இல்லை என்றும், 12-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என இஸ்மாடி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அவரின் குடும்பத்தை புண்படுத்தும் வகையில் எந்தவொரு கருத்தைகளையும் பதிவிட வேண்டாம் என பொதுமக்களிடம் இஸ்மாடி கேட்டுக் கொண்டார்.

விமானியாக மட்டுமல்லாமல் Aseana Percussion Unit எனும் உள்ளூர் இசைக்குழுவிலும் இசைக்கலைஞராகவும் சஞ்ஞீவ் இருந்து வந்துள்ளார். வைலின், கீபோட் மற்றும் தப்பளா போன்ற இசைக் கருவிகள் வாசிக்கும் நல்ல இசைக் கலைஞர் என அவரின் நட்பு வட்டாராங்கள் தெரிவித்தன. Aseana Percussion Unit–யின் விரைவில் வெளியீடு காணவிருக்கும் இரண்டாம் ஆலம்பத்தில் அவர் மிக ஈடுபாட்டுடன் செயல்பட்டதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தனது 36 வயது பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டிருந்தார் எனவும் அந்த இசைக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், சஞ்சீவ் Music Mart  இசைப்பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 4 மணியளவில் அவரின் உடல் தகனம் செய்யப்படும் என தகவல் தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!