
கோலாலம்பூர் , நவ 26 – 2021 வரவு செலவுத் திட்ட மசோதா, இன்று மக்களவையில் கொள்கை அளவில் அங்கீகரிக்கப்பட்டது.
பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் அரசாங்கம் தாக்கல் செய்த , மிகப் பெரிய ஒதுக்கீட்டை உட்படுத்திய 2021 வரவு செலவுத் திட்டம், பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பின் மூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கொள்கை அளவில் அந்த வரவு செலவுத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை, மாலை மணி 3.28-க்கு அவைத் தலைவர் டத்தோ அசார் அசிசான் ஹாரூன் அறிவித்தார்.
இந்த வரவு செலவுத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் வாயிலாக , பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின், நாட்டைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கு மக்களவையில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளார் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.