Latestமலேசியா

3ஆவது முறையாக பிரதமர் பதவிக்கு மகாதீர் பெயர் முன்மொழிவு

கோலாலம்பூர், அக் 18 – 3ஆவது முறையாக பிரதமர் பதவிக்கான வேட்பாளராக டாக்டர் மகாதீரை பெஜூவாங் கட்சி முன்மொழிந்துள்ளது. மலேசியாவை காப்பாற்றுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டாக்டர் மகாதீரின் அரசியல் செயலாளர் அபு பாக்கார் யஹ்யா கூறினார்.
இப்போதைய நடப்பு பிரதமர் முஹிடின் யாசினுக்கு பதில் 15ஆவது பொதுத் தேர்தல்வரை டாக்டர் மகாதீரை புதிய பிரதமராக நியமிப்பதற்கு முடிவு செய்திருக்கிறோம் என தமது முகநூலில் பதிவேற்றம் செய்த அறிக்கையில் அபு பாக்கார் தெரிவித்துள்ளார். 222 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ள நிலையில் உறுதியற்ற அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகான பிரதமர் பதவிக்கு மகாதீரின் பெயர் முன்மொழியப்படும் என அவர் சொன்னார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தமக்கு 120க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என பி.கே.ஆர் தலைவர் அன்வார் கூறியுள்ளார். இந்த நிலைமையில் முஹிடின் தலைமையிலான பெரிக்காத்தான் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக்கொள்வதற்கு குறித்து பரிசீலித்து வருவதாக அம்னோ கூறியுள்ளது. அதே வேளையில் அம்னோவின் மூத்த தலைவரும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான ரசாலி ஹம்சாவும் பெர்சத்து கட்சியின் தலைவருமான பிரதமர் முஹடினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். டாக்டர் மகாதீர் உட்பட பெஜூவாங் கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஹிடினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்துள்ளனர். .
முஹிடினை கவிழ்பதற்காக டாக்டர் மகாதீர் துங்கு ரசாலியுடன் இணைந்து செயல்படுவார் என்ற பேச்சும் இப்போது அடிபடுகிறது. நவம்பர் 2ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் தொடங்கவிருக்கிறது .முஹிடினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாம் பெற்றிருந்தாலும் அரசாங்க அமைச்சர் ஒருவர்தான் அதனை முன்மொழிய வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!