Latestமலேசியா

3 ஆண்டுக்குப் பிறகு ஏபெக் கூட்டத்தில் டிரம்ப் கலந்துகொண்டார்

கோலாலம்பூர், நவ 21- ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சநிலைக் கூட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் டோனல்ட் டிரம்ப் கலந்துகொண்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தது முதல் வெளி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருந்த டோனல்ட் டிரம்ப் இம்முறை ஏபெக் மாநாட்டில் கலந்துகொண்டது ஏபெக் தலைவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கோவிட் 19 பெருந்தொற்றினால் இந்த மாநாடு காணொளி வாயிலாக நேற்றிரவு தொடங்கியது. மலேசியா ஏற்று நடத்திய இந்த மாநாட்டின் செயலகம் பிரதமரின் அலுவலகமான புத்ரா பெர்டானாவில் செயல்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு மலேசிய பிரதமரின் அலுவலகப் பகுதியைக் கொண்டு அதன் காணொளி பின்னணிப் பகுதி வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் டிரம்ப் அதனை பயன்படுத்தாமல் தமது அலுவலகத்தின் தோற்றத்தினாலான காணொளி பின்னணியை பயன்படுத்தினார்.ஏபெக் தலைவர்களுக்கான கழுத்துப் பட்டை மற்றும் துண்டையும் டிரம்ப் அணிந்திருந்தார். அனைத்து தலைவர்களும் இதனை அணியாவிட்டாலும் இதனை அணிந்த சில தலைவர்களில் டிரம்ப்பும் ஒருவராவார்.

இந்த மாநாட்டை ஏற்று நடத்தும் மலேசியாவின் நினைவாக அதில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு கழுத்துப் பட்டையும் துண்டும் வழங்கப்பட்து . 2017 ஆம் ஆண்டிலிருந்து ஏபெக் உச்சநிலை மாநாடு மற்றும் ஆசியான் உச்சநிலைக் கூட்டம் எதிலும் டோனல்ட் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!