Latestமலேசியா

35 தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்த லாபீஸ் தமிழ்ப்பள்ளி 

கோலாலம்பூர், டிச 4 – கடந்த ஜூன் முதலாம் தேதியிலிருந்து  அக்டோபர்  31-ஆம் தேதி வரையில் நடைபெற்ற  எத்திக் ( E –Thic) எனப்படும்  அனைத்துலக  புத்தாக்க அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் ஆசிய  பசிபிக் பசுமை புத்தாக்கப் போட்டியில், ஜோகூரிலுள்ள லாபிஸ்  தமிழ்ப்பள்ளி  35 தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தது.

இணையம் வாயிலாக நடத்தப்பட்ட  அப்போட்டியில்,  30 மாணவர்களைக் கொண்ட 6 குழுக்களும்,  5 ஆசிரியர்களைக் கொண்ட  ஒரு குழுவும் பங்கேற்றது. அப்போட்டியில்,  மறுசுழற்சி பொருட்களின் மூலமாக உருவாக்கப்பட்ட  கண்டுப்பிடிப்புகள் இடம்பெறச் செய்யப்பட்டன.

நாட்டிலுள்ள அனைத்து வகை பள்ளிகளும்  பங்கெடுத்துக் கொண்ட  அப்போட்டியில், பல்வேறு பிரிவுகளில் லாபிஸ் தமிழ்ப்பள்ளியின் 7 கண்டுபிடிப்புகள்,  போட்டி ஏற்பாட்டாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!