Latestமலேசியா

891 மாணவர்கள் கலந்து கொண்ட எஸ். பி. எம் தேர்வு கருத்தரங்கு; இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்கு மித்ரா பாடுபடும் – டத்தோ ரமணன்

கோலாலம்பூர், டிச 18 – எஸ்.பி.எம் தேர்வுக்கு இந்திய மாணவர்களை சிறந்த மாணவர்களாக தயார்படுத்தும் பொருட்டு நாடு முழுவதிலும் கருத்தரங்கு மற்றும் ஆய்வு பட்டறைகளை நடத்தும் திட்டத்தை ஊக்குவிப்பதாக பிரதமர் துறையின் கீழ் செயல்பட்டுவரும் மித்ரா சிறப்பு குழுவின் தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். மித்ராவில் பல திட்டங்களை தாம் கொண்டிருந்தாலும் கல்விக்கு கூடுதல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் தமது நோக்கமாக இருப்பதாக அவர் கூறினார். அடுத்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கு தயாராகிவரும் எஸ்.பி எம் மாணவர்களுக்காக மித்ராவும் கல்வியாளர் டத்தோ ஈஸ்வரனும் இணைந்து நடத்திய எஸ்.பி.எம் கருத்தரங்கை மாஸா பல்கலைக்கழத்தில் முடித்து வைத்து பேசியபோது தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமச்சருமான டத்தோ ரமணன் கூறினார்.

Seminar Serambi SPM என்ற பெயரில் எஸ்.பி.எம் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காக இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டதாக “ES Tutorial Ventures” நிருவனத்தின் ஏற்பாட்டாளர் டத்தோ ஈஸ்வரன் தெரிவித்தார். இந்த கருத்தரங்கிள் சுமார் 891 இந்திய மாணவர்கள் கலந்துக்கொண்டனர். 5 பிரிவுகளாக பிரித்து 3 நாட்களுக்கு இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. எஸ்.பி.எம் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே மலாய் மொழி (Bahasa Malaysia), வரலாறு (Sejarah), கணிதம் (Maths) ஆகிய பாடங்களில் மாணவர்கள் பலவீனமாக இருக்கின்றனர். இந்த பாடங்கள் எஸ்.பி.எம் தேர்வுக்கு மிக முக்கியமாக இருப்பதால் மித்ராவின ஆதரவோடு எஸ்.பி.எம் தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்தும் முயற்சியாக இந்த கருத்தரங்கை மித்ராவும் சேர்ந்து ஈடுபட்டதாகவும் இதற்கான முழு செலவையும் மித்ரா ஏற்றுக்கொண்டதாக ஈஸ்வரன் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் அமரும் இந்திய மாணவர்களுக்கு பெரும் பயனாக அமைந்த இந்த கருத்தரங்கின் முடிவு நிகழ்ச்சியில் டத்தோ அன்புமணி மற்றும் மித்தராவின் தலைமை இயக்குனர் ரவிந்திரனும் கலந்து சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!