Latestமலேசியா

5 அமைச்சர்கள் தனித்திருப்பதால் அமைச்சரவைக் கூட்டம் ரத்து

கோலாலம்பூர், அக் 1 – சபாவிலிருந்து திரும்பிய சில அமைச்சர்கள் இன்னமும் தனித்திருப்பதால் இன்று நடைபெற வேண்டிய வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் ரத்துச்செய்யப்பட்டது. இன்னும் சிலர் கோவிட் 19 நோயாளிகளுடன் அணுக்கமாக தொடர்பில் இருந்ததால் அவர்களும் தனிதிருக்கின்றனர்.

தற்காப்புத் துறைக்கான மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், வெளியறவு அமைச்சர் ஹிசாமுடின் உசேய்ன், உள்துறை அமச்சர் ஹம்சா ஜைனுடின், இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ரிசால் மெரிக்கான், விவசாயம் மற்றும் உணவு தொழில்துறை அமைச்சர் ரோனல்ட் கியான்டி, (Ronald Kiandee) ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சரவை கூட்டம் ரத்துச்செய்யப்பட்டதாக கூறப்பட்டது. சபாவிலிருந்து தாம் திரும்பியவுடன் தமக்கு எச்சில் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் இரண்டாவது பரிசோதனையின் முடிவு தெரியும்வரை வீட்டில் தனித்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக இஸ்மாயில் சப்ரி உறுதிப்படுத்தினார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு பணியில் ஈடுபடும்படி சுகாதார அமைச்சு தம்மை பணித்துள்ளதாக ஹிசாமுடின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!