Latestமலேசியா

5 வயது சிறுமி அண்டை வீட்டு காமுகனால் பாலியல் பலாத்காரம்!

டுங்குன், செப் 22 – திரங்காணு, டுங்குன் (Dungun)னில் ஐந்து வயது பெண் பிள்ளை, தனது அண்டை வீட்டிலுள்ள 18 வயது இளைஞனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
அண்டை வீட்டில் இருந்து திரும்பி வந்த தமது மகள் அழுது கொண்டே வந்ததைப் பார்த்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் விசாரித்த போது, அவ்விளைஞனின் அக்கீழ்த்தரமான செயல் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அச்சிறுமியின் தாய், இளைஞனின் வீட்டுக்குச் சென்று கேட்ட போது, கொஞ்சம் கூட தயக்கமோ பயமோ இல்லாமல், தாம் சிறுமியைப் பலாத்காரம் செய்ததை அவ்விளைஞன் ஒப்புக் கொண்டான்.
இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர் போலீஸ் புகார் செய்துள்ளனர். போலீஸ் புகார் கிடைத்திருப்பதை உறுதிப் படுத்திய டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் பஹாரூடின் அப்துல்லா (Baharudin Abdullah), இச்சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!