Latestமலேசியா

உலக கராத்தே சம்மேளனத்தின் போட்டியில் ஷமலாராணி தங்கப் பதக்கம் வென்றார்

கோலாலம்பூர், பிப் 20 – சைப்ரஸில் Larnaca வில் நடைபெற்ற உலக கராத்தே சம்மேளனத்தின் முதல் நிலை கராத்தே போட்டியில் 50 கிலோ எடைக்கு உட்பட்ட பிரிவில் தேசிய கராத்தே வீரங்கனையான C.Shamalarani தங்கப் பதக்கம் வென்று மலேசியாவுக்கு பெருமை சேர்த்தார். 25வயதுடைய Shamalarani இறுதிச் சுற்றில் ஸ்பெய்னின் Eva Rodriguez என்ற வீராங்கனையை 9க்கு 5 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். சீ விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்றிருக்கும் Shamalarani இதற்கு முன் Guatemala வைச் சேர்ந்த Barbar Michele Morales சை 3 -2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்றார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதி சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் உலக கராத்தே சம்மேளனத்தின கராத்தே போட்டியின் வெற்றி அமைந்திருப்பதாக தமது instagram மில் Shamalarani மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார். உலக அளவிலான மற்றொரு தங்கப் பதக்கம் இப்போது தமது கைக்கு கிடைத்திருப்பதாகவும் கம்போடியாவில் கடந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற சீ போட்டிக்கு பின் 9 மாத கால உழைப்பிற்கு கிடைத்த உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இதுவாகும் என Shah Alam , Taman Sri Muda வைச் சேர்ந்த Shamalarani தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!