Latestமலேசியா

7 வயது மகன் ஜீவன் குமாரை சுட்டுக் கொன்றுவிட்டு காப்பரல் ராஜ்குமார் தற்கொலை பல கோணங்களில் போலீஸ் விசாரணை

சிரம்பான், மார்ச் 26 – தனது ஏழு வயது மகன் ஜீவன் குமாரை சுட்டுக்கொன்றுவிட்டு போலீஸ் காப்ரல் ராஜ்குமார் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் (D 4 ) வேவுப் பிரிவில் பணியாற்றி வந்த 35 வயதுடைய காப்பரல் ராஜ்குமார் மற்றும் அவரது மகன் ஜீவன் குமார் பாரோய் கம்போங் செந்தோசா ஜெயாவில் புரோட்டோன் வீரா காரில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

நேற்று மாலை மணி 6,42 அளவில் தகவல் கிடைக்கப்பெற்ற போலீசர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்ட போது காரில் இறந்து கிடந்த அந்த இருவரின் தலையிலும் துப்பக்கிக் சூடு காயங்கள் இருந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட சைட் இப்ராஹிம் தெரிவித்தார்.

ராஜ்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது மகனை சுட்டுக் கொன்றுள்ளார். குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் இந்த கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக முகமட் சைட் கூறினார். போலீஸ் துப்பாக்கியை பயன்படுத்தி ராஜ்குமார் தனது மகனை சுட்டுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கார்ப்பரல் ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்பச் பிரச்னையே காரணம் என முகமட் சைட் தெரிவித்தார். செனவான், தாமான் செம்பாகாவைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ஜீவன் குமார் அவரது இரண்டாவது மகனாவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!