Latestசினிமாமலேசியா

72 வயதில் இயற்கையை எய்தினார் மூத்த நடிகர் காந்திநாதன்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 3 – நாட்டின் பழம் பெரும் மூத்த நடிகரான காந்திநாதன் இன்று இயற்கையை எய்தினார். உடல் நலம் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காந்திநாதன் தனது 72வது வயதில் மரணமடைந்துள்ளார்.

1948ஆம் ஆண்டு பிறந்த அவர் பிறந்தது முதலே நடிப்புத் துறைச்சார்ந்த பின்னணியில் வளர்ந்தவர் ஆவார். அவரது தாயாரும் மேடை நாடகத் துறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா வகை கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்கக் கூடிய திறமை வாய்ந்தவரான காந்திநாதன் அனைத்து வயது தரப்பினரிடமும் மிகவும் பாசமாக பழகக் கூடியவராவார். குழந்தைகளுடன் பேசும்போது குழந்தையாகவே மாறக்கூடிய நல்ல மனம் படைத்த அவரின் மரணம் மலேசிய சினிமாத் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

இந்நிலையில், நடிகர் காந்திநாதனுடன் ஒன்றாக நடிப்புத் துறையில் நடத்த, வேலை செய்தவர்களான இயக்குனர் சுகன் பஞ்சாசரம், நடிகர் கே.எஸ்.மணியம், நடிகர் தங்கமணி, நடிகர் குணா, நடிகை வசந்தா பொண்ணுதுறை ஆகியோருடன் சசிதரன், வெணீசா, தியாகு, அகோன்ரன் மற்றும் பென் ஜி ஆகியோரும் அவரது இழப்பு குறித்து வணக்கம் மலேசியாவிடம் தங்களது துயரத்தை தெரிவித்துக் கொண்டனர்.

அன்னாரின் மறைவிற்கு வணக்கம் மலேசியா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!