Latestமலேசியா

B40 பிரிவினருக்கான moratorium அனுமதி   இயல்பாகவே வழங்கப்படும்  

கோலாலம்பூர், நவ  26 – வங்கிக் கடனுதவியை திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் moratorium  அனுமதி,  B40 பிரிவினருக்கும் , சிறு வியாபாரிகளுக்கும் இயல்பாகவே  வழங்கப்படும்.

எனினும், அதற்கு அவர்கள் விண்ணப்பிக்க வேண்டுமென  2021 வரவு செலவுத் திட்டம் மீதான வாதத்தை நிறைவு செய்து வைத்த, நிதியமைச்சர் தெங்கு சப்ரூல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

M40 நடுத்தர வருமானம் பெறும் பிரிவினர்,  T20 உயர் வருமானம் பிரிவினர் ஆகியோரும் இந்த moratorium சலுகைக்கு தகுதி பெறுகின்றனர்.  எனினும் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தத்தம் வங்கிகளிடம் விண்ணப்பம் செய்ய வேண்டுமென அமைச்சர்  கூறினார்.

இதனிடையே,  போலீஸ்-ராணுவ படையினர் உட்பட முன் களப் பணியாளர்கள் அனைவருக்கும் ,  ஒரு முறை  300 ரிங்கிட் உதவித் தொகையை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கு முன்பு, 2021 வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது ,  சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு மட்டுமே,  ஒரு முறை வழங்கப்படும் 500 ரிங்கிட் உதவித் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

இவற்றுடன்,  இளைஞர்களின்  e- Wallet  மின்னியல் பணப்-பையில்  அரசாங்கம் செலுத்தும் தொகை தற்போது   50 ரிங்கிட்டிலிருந்து  100 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!