Latestமலேசியா

BPR ரொக்க உதவித் தொகை நாளை முதல் வழங்கப்படும்

கோலாலம்பூர், பிப் 24- BPR (Bantuan Prihatin Rakyat) எனப்படும் பரிவுமிக்க மக்கள் உதவித் தொகையை நாளை முதல் கட்டம் கட்டமாக 84 லட்சத்து 50,000 பேர் பெறுவார்கள். மொத்தம் 1.93 பில்லியன் ரிங்கிட்டை இந்த உதவித் தொகை உள்ளடக்கியிருக்கும் என நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஷப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் தெரிவித்தார். 44 லட்சம் குடும்பத் தலைவர்கள் 300 ரிங்கிட் உதவித் தொகையை பெறுவார்கள். திருமணமாகமல் இருக்கும் சுமார் 40 லட்சத்து 50,000 தனிப்பட்ட நபர்களில் ஒவ்வொருவரும் தலா 150 ரிங்கிட் உதவித் தொகையை பெறுவார்கள்.

குடும்ப தலைவர்கள் மற்றும் திருமணமாகாத தனிப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கில் நாளை முதல் இந்த உதவித் தொகை சேர்க்கப்படும். வங்கிக் கணக்கை கொண்டிருக்காதவர்கள் பிப்ரவரி 25ஆம் தேதி வியாழக்கிழமை முதல் Bank Simpanan Nasional கிளைகள் வாயிலாக உதவித் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!