Latestமலேசியா

2ஆம் ஆண்டாக மீண்டும் மலர்ந்துவிட்டது பேசிஸ் பேய் நிறுவனத்தின் “சரஸ்வதி ஆங்கில சவால் போட்டி”

கோலாலம்பூர், பிப் 5 – இரண்டாம் ஆண்டாக மீண்டும் மலர்ந்துவிட்டது சரஸ்வதி ஆங்கில சவால் போட்டி.

கடந்த ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டுகான போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டியில் B 40 பிரிவைச் சேர்ந்த 11 அல்லது 12 வயதுடைய மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என இப்போட்டியின் ஏற்பாட்டு நிறுவனமான பேசிஸ் பேய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டத்தோ பிரபா தியாகராஜா கூறியுள்ளார்.

இவ்வாண்டு போட்டியில் முதல் நிலை வெற்றியாளருக்கு 20,000 ரிங்கிட்டும் , இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு 10,000 ரிங்கிட்டும் , மூன்றாம் இடத்தை பெறுபவருக்கு 5,000 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படவிருக்கிறது.

மேலும் இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெறும் அனைத்து போட்டியாளர்களுக்கும் தலா 1,000 ரிங்கிட் வழங்கப்படும்.

இதனிடையே வெற்றி பெறும் பள்ளிகளுக்கும் முதல் பரிசாக 5,000 ரிங்கிட்டும், இரண்டாவது இடத்தை பெறும் பள்ளிக்கு 3,000 ரிங்கிட்டும், மூன்றாவது இடத்தை பெறும் பள்ளிக்கு 2,000 வெள்ளியும் வழங்கப்படும் என பிரபா தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரபா தியாகராஜன் இது தொடர்பான விவரங்களை அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சுமார் 250 தமிழ் பள்ளிகளைச் சேர்ந்த 1,200 பேர் சரஸ்வதி ஆங்கில சவால் போட்டியில் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் தங்களது ஆங்கிலத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆண்டும் திரளான மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்வார்கள் என பிரபா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!