Latestமலேசியா

CMCO அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் 10 லட்சம் தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வர்

கோலாலம்பூர், அக் 20- CMCO எனப்படும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயா மற்றும் சபாவைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிர்வாகம் மற்றும கண்காணிப்பில் சம்பந்தப்பட்ட 10 லட்சம் தொழிலாளர்கள் அக்டோபர் 22 ஆம் தேதியிலிருந்து வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வேலை செய்யும் இடங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெளிநடவடிக்கையில் வேலைக்கு செல்வதற்கு பணிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களும் சொக்சோவுடன் இணைந்து கோவிட் தொற்றுக்கான எச்சில் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

சந்தாதாரர்களுக்கான இந்த செலவுத் தொகையை சொக்சோ ஏற்றுக்கொள்ளும்.
கோவிட் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வேலை செய்யும் இடங்களை உள்ளடக்கிய தொற்றுக்குள்ளான பகுதிகளில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் இது 10 லட்சம் தொழிலாளர்களை பாதிக்கும் என தற்காப்புக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!