Latestமலேசியா

CMCO: கூட்டரசு பிரதேச பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன!

கோலாலம்பூர், அக் 18 – நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கூட்டரசு பிரதேச சுற்றுப்பகுதியிலுள்ள அனைத்து பொது பூங்காக்களும் மீண்டும் திறக்கப்படும்,

தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சு ஆகியவை அதற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா (Tan Sri Annuar Musa) தெரிவித்தார்.

பூங்காக்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், நிர்ணயிக்கப்பட்ட SOP விதிமுறைகள் அனைத்தும் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டியது மிக அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.

நகரவாசிகள் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பளிக்கும் பொருட்டு பூங்காக்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் பகுதிகளிலுள்ள ஃபுட்சால் மையங்கள், gym உடற்பயிற்சி மையம், கால்பந்து திடல் போன்றவற்றைத் திறப்பதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!