
கோலாலம்பூர், ஜன 13 -MCO நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவிற்கு ஏற்ப , DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் நிர்வகிக்கும் பொது பூங்காக்கள் அனைத்தும் மூடப்படும்.
இன்று தொடங்கி பின்னர் அறிவிக்கப்படும் ஒரு தேதி வரையில் , அந்த பொது பூங்காக்கள் மூடப்பட்டிருக்குமென DBKL, அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொண்டது.
பெர்டானா தாவரவியல் பூங்கா (Taman Botani Perdana) , புக்கிட் கியாரா பொதுப் பூங்கா, திதிவங்கசா ஏரிப் பூங்கா ( Taman Tasik Titiwangsa) மஞ்சலாரா ஏரிப் பூங்கா ( Taman Tasik Manjalara ), கெப்போங் நகர் ஏரிப் பூங்கா (Taman Tasik Metropolitan Kepong ) ஆகிய பூங்காங்கள், DBKL –லின் நிர்வகிப்பின் கீழ் உள்ளன.
இதனிடையே, DBKL மெனாரா கட்டடத்தில் , கட்டண சேவை முகப்புகளும், Drive thru எனப்படும் வாகனங்களில் இருந்தே கட்டணத்தைச் செலுத்தி செல்லும் முகப்புகளும் , திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை மணி எட்டு முதல் மாலை மணி நான்கு வரை திறந்திருக்கும்.
வர்த்தக உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் முகப்புகள் காலை மணி ஒன்பது தொடங்கி மதியம் மணி மூன்று வரை திறந்திருக்கும்.
ஒரு நாளைக்கு 100 வாடிக்கையாளர்கள் மட்டுமே அந்த முகப்பில் சேவையைப் பெற முடியும்.