Latestமலேசியா

EMCO பகுதியிலிந்து 400 பேர் தப்பிச் செல்ல உதவிய முதலாளிகள் மீது நடவடிக்கை

கோலாலம்பூர். நவ 12- பண்டார் பாரு சாலாக் திங்கியில் EMCO எனப்படும் வலுப்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு அமலாக்க பகுதியான மேடான் 88 என்ற இடத்திலிருந்து தப்பிச் சென்ற 400 குடியிருப்பு வாசிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அங்கு இன்று EMCO அமல்படுத்தப்படுவதாக தகவல் அறிந்தவுடன் அந்த குடியிருப்புவாசிகள் அவர்களது வீட்டிற்கு நேற்று திரும்பவில்லை.

அந்த பகுதியில் கோவிட் 19 தொற்று பரவியிருப்பதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து இன்று தொடங்கி 14 நாட்களுக்கு அங்கு நடமாட்ட முடக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பியோடியவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

தங்களது தொழிலாளர்களுக்கு உடந்தையாக பேருந்துகளை ஏற்பாடு செய்து அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு முதலாளிகள் ஒத்துழைப்பு வழங்கியிருப்பதும் தமக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக தற்காப்புத் துறைக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறினார். அவர்கள் வேலை செய்துவரும் தொழில் நிர்வாகத்தின் முதலாளிகளின் உதவியோடு அங்கிருந்து வெளியேறியவர்களை தேடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபடுவார்கள் என இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

அவர்கள் தப்பிச் செல்வதற்கு முதலாளிகள் உதவி செய்திருந்தால் சம்பந்தப்பட்ட முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். அந்த தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதன் மூலம் மற்றவர்களுக்கும் மிரட்டலாக திகழ்வர்கள் என அவர் தெரிவித்தார். மேடான் 88 குடியிருப்புவாசிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் உள்நாட்டைச் சேர்ந்தவர்களாவர். நவம்பர் 10 ஆம் தேதிவரை அங்கு 40 பேர் கோவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!