Latestஉலகம்விளையாட்டு
FIFA சிறந்த காற்பந்து விளையாட்டாளராக ROBERT LEWANDOWSKI தேர்வு

சூரிச், டிச 18 – ஃபிஃபா( FIFA) 2020 -ஆம் ஆண்டின் சிறந்த காற்பந்து விளையாட்டாளராக பாயெர்ன் மியூனிக் (BAYERN MUNICH ) அணியின் விளையாட்டாளர் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (ROBERT LEWANDOWSKI ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு அந்த விருதை, லியோனல் மெஸ்ஸியும்( LIONEL MESSI), கிறிஸ்டியானோ ரொனால்டோவும் (CRISTIANO RONALDO), போட்டி போட்டு வென்று வந்த நிலையில், முதல் முறையாக அந்த விருதை ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி வென்றிருக்கின்றார்.
போலந்தின் அந்த முன்னனி ஆட்டக்காரர் கடந்த பருவத்தில் தான் பங்கேற்ற 47 ஆட்டங்களில் 55 கோல்களைப் புகுத்தியுள்ளார்.