Latestமலேசியா

JPJ அலுவலகத்தில் இறந்த முதியவர் முழு கோவிட் தடுப்பூசியை  போட்டிருந்தார்

கோலாலம்பூர், செப் 15 – நேற்று, சிலாங்கூர், Bangi, JPJ  சாலை போக்குவரத்து துறையின் அலுவலகத்தில் , அமர்ந்தவாறு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட முதியவர்,  முழுமையாக  இரு கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர் என , இன்று  JPJ ஓர் அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியது.

JPJ முகப்பிட  சேவையைப் பெறுவதற்காக வந்திருந்த   76 வயது மதிக்கத்தக்க  அந்த முதியவரின்  உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது.  மைசெஜாத்ரா செயலியின் வாயிலாக , அவர் முழுமையாக கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்டதும் தெரிய வந்தது.

வரிசையில் காத்திருக்க வைக்காமல் நேரடியாக அவர்  நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.
அங்கு காத்திருக்கும்போது அவர் திடிரென சுயநினைவிழந்ததாகவும், உடனடியாக  அவசர அழைப்பு செய்யப்பட்டு  அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதாகவும்,  JPJ  தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!