Latestமலேசியா

MCO அமலாக்கத்தினால் மலேசிய ஹோட்டல் துறையினர் வருமான இழப்பை எதிர்நோக்கலாம்

கோலாலம்பூர், ஜன 14- MCO இரண்டாவது முறையாக அமல்படுத்தப்பட்டிருப்பதால் மலேசிய ஹோட்டல் தொழில்துறையினர் மேலும் வருமான இழப்புக்கு உள்ளாகலாம். MCO அமலாக்கத்தின் ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும் 30 கோடி ரிங்கிட் வருமான இழப்பை மலேசிய ஹோட்டல் தொழில்துறையில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் எதிர்நோக்கக்கூடும் என மலேசிய ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் யாப் லிப் செங் ( Yap Lip Seng ) தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 7ஆம் தேதியிருந்து உள்நாட்டு சுற்றுலா தொழில்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் ஹோட்டல் தொழில்துறையினருக்கு வருமானம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்தபோதிலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையில் ஹோட்டலில் தங்கும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்ததால் சற்று நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.

ஆனால் தற்போது MCO அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஹோட்டல் தொழில்துறையின் வருமானத்தில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல் தொழில் துறையில் முன்னேற்றம் காணப்படாவிட்டால் இத்துறையில் ஈடுபட்டவர்கள் இதில் நீடித்திருப்பது மிகவும் சிரமம். அதோடு பலர் வேலை இழக்க வேண்டிய சூழ்நிலையும் இருப்பதாக யாப் லிப் செங் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு கோவிட் தொற்று பரவியது முதல் ஹோட்டல் தொழில் துறையில் ஈடுபட்டவர்கள் மீட்சிக்கான எந்தெவொரு நிதியுதவியையும் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!