Latestமலேசியா

MCO காலத்தில் பொது பூங்காவில் பயிற்சிக்கு அனுமதிப்பீர் -கோலாலம்பூர் எம்.பிக்கள் கோரிக்கை

கோலாலம்பூர், ஜன 14- MCO அமலாக்கத்தின்போது கோலாலம்பூரில் உள்ள அனைத்து பொது பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியளிப்பதில்லை என்ற முடிவை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மாற்றிக் கொள்ள வேண்டும் என கோலாலம்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MCO காலத்தின்போது பொது பூங்காக்களில் மெதுநடை மற்றும் சைக்கிளோட்டம் போன்ற பயிற்சிகளில் பொதுமக்கள் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கப்படுவதாக இதற்கு முன் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்திருந்ததற்கு எதிர்மாறாக கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் முடிவு இருப்பதாக இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் அந்த 9 நாடாளுமன்றன் உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர்.
நீண்ட நேரம் தனித்திருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும் என்றும் ஆனால் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே விளையாட்டு பூங்காங்களில் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கப்படுவதாக பிரதமர் கூறியிருந்தார்.

கோலாலம்பூர் குடியிருப்புவாசிகளுக்கு உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பொது பூங்காக்கள் பொருத்தமான இடங்களாக திகழ்கின்றன. தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள SOP விதிமுறைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான சூழ்நிலையோடு கோலாலம்பூர் குடியிருப்புவாசிகள் பொது பூங்காவிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என டி.ஏ.பி செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கொக் வாய் ( Tan Kok wai). லெம்பா பந்தாய் PKR எம்.பி Fahmi Fadzil . டி.ஏ,பி செபூத்தோ எம்.பி திரேசா கோக் , ( Terasa KoK). Setiawangsa PKR எம்.பி நிக் நஸ்மி நிக் அகமட் (Nik Nazmi Nik Ahmad ) டி.ஏ.பி புக்கிட் பிந்தாங் எம்.பி போஃங் கூய் லுன் ( Fong Kui Lun ). வங்சா மாஜூ PKR எம்.பி டான் யீ கியு ( Tan yee Kew,) சிகாம்புட் டி.ஏ.பி எம்.பி ஹன்னா இயோ ( Hannah Yeoh) , Kepong DAP எம்.பி லிம் லிப் எங் ( Lim Lip Eng) மற்றும் PKR Batu எம்.பி பி. பிரபாகரன் (.Prabhakaran) ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அதோடு அந்த பொது பூங்காக்கள் அனைத்தும் பெரும்பாலானவை வசிப்பிடப் பகுதிகளுக்கு அருகே இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தனது அதிகாரத்திற்குபட்ட கோலாலம்பூரில் உள்ள அனைத்து பொது பூங்காக்களும் அடுத்த அறிவிப்புவரை மூடப்படுவதாக நேற்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது . புத்ரா ஜெயா கழகமும் இதே போன்ற முடிவை எடுத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!