Latestமலேசியா

MCO : வர்த்தக வாகனங்கள் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை

புத்ராஜெயா, ஜன 13  –  MCO  நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் , வர்த்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு, அதன் உரிமையாளர்கள், போக்குவரத்து அமைச்சிடம் இருந்து அனுமதி கடிதத்தைப் பெற வேண்டியதில்லை.

MCO காலத்தின் போது  வர்த்தக வாகனங்கள் பயணிப்பதற்கு  தடை விதிக்கப்படாது என    போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

சாலை தடுப்பின்போது அமலாக்க அதிகாரிகளிடம், வர்த்தக வாகன ஓட்டுநர்கள் , தத்தம் முதலாளிமார்கள்  வழங்கியிருக்கும்  அனுமதி கடிதத்தைக் காண்பித்தால் மட்டும் போதுமானது. மேலும் சாலை தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சாலையில்,  வர்த்தக வாகனங்கள் பயணிப்பதற்கு என சிறப்பு வழி ஏற்படுத்தப்படும்.

இதனிடையே  பொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும், பொருள்  கிடங்கு நடத்துநர்களும் ,  போக்குவரத்து அமைச்சின் அனுமதியைத் தத்தம் சங்கங்களின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

எந்தவொரு சங்கங்களுடனும்  பதிவு பெறாத நிறுவனங்கள் அல்லது அரசாங்க சார்பற்ற  அமைப்புகள் , போக்குவரத்து அமைச்சின் அகப்பக்கத்தின் ( https://application.mot.gov.my/) வாயிலாக  பயண அனுமதியைப் பெறலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!