Latestமலேசியா

Moratorium சலுகை நீட்டிக்கப்பட வேண்டும்  ;  FOMCA

கோலாலம்பூர், ஜன13 –  நாட்டில் அவசர நிலையும்,  MCO நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, moratorium எனப்படும் வங்கி கடனைத் திரும்ப செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகையை, அரசாங்கம் மேலும்  நீட்டிக்க வேண்டுமென ,  ஃபோம்கா ( FOMCA ) எனப்படும்  மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் கேட்டுக் கொண்டது.

ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் வேலை இழந்தவர்களுக்கு இன்னும் புதிய வேலை கிடைக்கவில்லை. சில தொழிலாளர்கள்  சம்பள குறைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சிலர் தங்களது எதிர்கால நிலை குறித்து தெரியாமல் உள்ளனர்.

இந்நிலையில், இரண்டாவது முறையாக மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்  மேலும்  பாதிக்கப்படுவார்கள் என ஃபோம்கா- வின் துணைத் தலைவர் முகமட் யூசோப் அப்துல் ரஹ்மான்  தெரிவித்தார்.

அரசாங்கத்தின் புதிய கட்டுப்பாடுகளினால் சுயதொழில் செய்யும்  சிறுவியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சிலர் தங்களது வியாபாரத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

MCO – பகுதிகளில்,  அங்காடி கடைகள்  செயல்பட அனுமதிக்கப்பட்டாலும், மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால்  , வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை  குறையும்.   மாநிலம் கடந்து பயணிக்க  தடை உள்ளதால், சுற்றுலா சார்ந்த வியாபாரங்களும் பாதிக்கப்படும்.

எனவே , மக்களின்  வருமானம் பாதிக்கப்படுமென்பதால் ,  moratorium  சலுகையை நீட்டிக்கும்படி ஃபோம்கா வலியுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!