Latestமலேசியா

PKR மகளிர் தலைவியாக புஷியா சாலே நியமனம்

கோலாலம்பூர், ஜூலை 12 – குவந்தான் எம்.பி புஷியா சாலே ( Fusiah Salleh) பி.கே.ஆர் கட்சியின் மகளிர் பகுதியின் புதிய தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹனிசா தல்ஹாவுக்கு பதில் புஷியா இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பி.கே.ஆர் கட்சியின் முகநூலில் வெளியிட்ப்பட்ட வாழ்த்துச் செய்தியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.கே.ஆர் கட்சியின் மகளிர் பிரிவு தலைவியாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டிருக்கும் புஷியா சாலேவுக்கு வாழ்த்து என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தம்மீது நம்பிக்கை வைத்து இந்த பதவிக்கு நியமித்த கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் கட்சியின் மத்திய தலைமைத்துவத்திற்கு புஷியா சாலே நன்றியை தெரிவித்துக் கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்வதற்கு முன் அந்த அரசாங்கத்தில் பிரதமர் துறை துணையமைச்சராக புஷியா பதவி வகித்தார். இதற்கு முன் நடைபெற்ற கட்சித் தேர்தலில் அவர் மகளிர் பிரிவின் தலைமைத்துவ பதவிக்கு போட்டியிட் அவர் ஹனிசாவிடம் தோல்வி கண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!