Latestஉலகம்

உருகும் பனிப்பாறை; உறங்கும் பனிக்கரடி – சிறந்த வனவிலங்கு புகைப்பட விருது

பிரிட்டன், பிப் 11 – “Napping Polar Bear” என அழைக்கப்படும் இந்தப் புகைப்படம், 2024 ஆம் ஆண்டின் வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கான “People’s Choice” விருதை வென்றுள்ளது.

பிரித்தானிய புகைப்படக் கலைஞர் நிமா சரிகாணி பனிக்கட்டியில் தூங்கும் பனிக்கரடியின் இந்தப் படத்தை எடுத்தவராவர். இந்தப் புகைப்படத்திற்காக, நிமா சரிகாணி இந்த ஆண்டு வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மக்கள் தேர்வு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பனிக்கரடிகளுக்காக நார்வேயில் மூன்று நாட்கள் அலைந்து திரிந்து இந்த புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில், இந்த புகைப்படம், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது என வலைத்தளவாசிகள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

புவி வெப்பமயமாதல் பற்றி யாதும் அறியாத அந்த பனிக்கரடி தன் வாழ்விடமான பனிப்பாறைகளை உருகுவதன் காரணம் புரியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. புவி வெப்பமயமாதலின் ஆதி காரணமான மனிதர்கள் எப்போது விழித்துக்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வியை இந்தப் புகைப்படம் எழுப்புவதாகப் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!