Latestஇந்தியாஉலகம்

“Sorry” என்று எழுதிவிட்டு வைத்து மருத்துவர் தற்கொலை

கொல்லம், அக் 3 – கேரளா மாநிலத்தின் கொல்லம் எனும் இடத்தில் 35 வயது மருத்துவர் ஒருவர் ‘என்னை மன்னித்துவிடு’ என்ற எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

மருத்துவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலிசார் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர். அனூப் கிருஷ்ணா எனும் அந்த மருத்துவர் கிலிகொல்லூரில் அனூப் ஆர்தோ கேர் எனும் மருத்துவமனையை நடத்தி வருகின்றார்.

செப்டம்பர் 23ஆம் திகதி, டாக்டர் அனூப் தலைமையில் அவரது மருத்துவமனையில் 7 வயது சிறுமிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. அச்சிறுமி பின்னர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அச்சிறுமியின் மரணத்திற்கு டாக்டர் அனூப்தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவர் குளியறையில் த்ற்கொலை செய்துக் கொண்டதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியின் மரணத்திற்கும் இவரின் தற்கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என போலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!