Latestமலேசியா

சர்சைக்குரிய கணேஸ்பரணை மீண்டும் போலீசார் தேடுகின்றனர்

கோலாலம்பூர், மார்ச் 27 – சர்ச்சைக்குரிய 3 R எனப்படும் அரச அமைப்பு, இனம் மற்றும் சமயம் குறித்து கருத்துரைத்திருக்கும் Ganesparan Nadaraja வை மீண்டும் போலீசார் தேடிவருகின்றனர். நேற்றுவரை அவருக்கு எதிராக 22 வழக்குகள் தொடர்பான விசாரணைகள் திறக்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு அவருக்கு எதிராக நாங்கள் விசாரணை தொடங்கியபோது அவர் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார். இன்றுவரை அவர் நாட்டிற்கு திரும்பவில்லையென புக்கிட் அமான் குற்றப்புலயாய்வுத்துறை தலைவர் கமிஷனர் டத்தோஸ்ரீ Mohd Shuhaily Mohd Zain இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்,
அண்மையில் Ganesparan வெளியிட்டிருந்த இரண்டு சர்ச்கைசக்குரிய காணொளிகள் வைரலாகி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு Mohd Shuhaily பதில் அளித்தார். Ganesparan னுக்கு எதிராக புதிதாக இரண்டு புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே நீதிமன்றத்திற்கு வராமலேயே அந்நபருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தற்போது Ganesparan ஐரோப்பாவில் வசித்து வருவதாக போலீஸ் நம்புகிறது. போலீஸ் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவரது கடப்பிழை குடிநுழைவுத்துறை ரத்துச் செய்திருப்பதாக கமிஷனர் Mohd Shuhaily தெரிவித்தார். அந்த நபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை நோட்டிஸ் பட்டியலை வெளியிடும்படி Interpol எனப்படும் அனைத்துலக போலிஸிற்கு கோரிக்கை விடுத்தும் தனது தேவைகளை அது நிறைவுசெய்யவில்லை என்பதால் சிவப்பு எச்சரிக்கை நோட்டிஸ் வெளியிட முடியாது என அவர்கள் கூறிவிட்டதையும் Mohd Shuhaily விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!