Latestமலேசியா

60,000 மேற்பட்ட சிலாங்கூர்கூ வீடுகள் நிர்மாணிப்பு

ஷா அலாம், மார்ச் 4 – சிலாங்கூர் மக்களுக்காக 2014ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம்வரை 60,843 வீடுகள் சிலங்கூரில் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் 37,008 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதோடு வீடுகள் வாங்கியோருக்கு அந்த வீடுகள் வழங்கப்பட்டு விட்டதாக வீடமைப்புக்கான சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் Borhan Aman Shah தெரிவித்தார். மேலும் 5,997 வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருவதாகவும் இவ்வாண்டு இறுதிக்குள் அவற்றின் கட்டுமான பணிகள் முடிந்துவிடும் என அவர் கூறினார். இன்று சிலங்கூர் சட்டமன்றத்தில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் Rajiv Rishyakaran எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது Borhan இத்தகவலை வெளியிட்டார்.

கடந்த ஆண்டு பொதுத் தேர்தலின்போது சிலாங்கூரில் 200,000 Selangor Ku வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டதாகவும் அந்த வீடுகளின் கட்டுமானத் திட்டம் எப்படி இருக்கிறது என Rajiv Rishyakaran சட்டமன்ற கூட்டத்தில் வினவியிருந்தார். எஞ்சிய வீடுகள் 2029ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிலாங்கூரில் ஒவ்வொரு பிரஜையும் பாதுகாப்பான மற்றும் வசதியான சொந்த வீட்டை பெறுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு வாங்கக்கூடிய விலையிலான வீடமைப்பு திட்ட கொள்கை இருப்பதாக இதற்கு முன்னதாக சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ Amiruddin Shari சட்மன்றத்தில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!