Latestமலேசியா

நாட்டிற்குள் கொண்டுவரும் கடத்தல் பொருட்களுக்கு கையூட்டு தர முன்வந்த அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது

புத்ரா ஜெயா, மார்ச 14 – நாட்டிற்குள் கொண்டுவரும் கடத்தல் பொருட்களுக்காக ஒரு கும்பலுக்காக கையூட்டு தரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அரசாங்க சேவையின் அதிகாரி ஒருவர் உட்பட நான்கு தனிப்பட்ட நபர்களை MACC கைது செய்துள்ளது.

30 மற்றும் 50 வயதுக்குட்பட்ட அந்த நால்வரும் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக MACC தலைமையகத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டனர்.

அமலாக்க நிறுவனங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் கும்பல்களுக்கு அவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.

அவர்களது கடத்தல் நடவடிக்கை சுமுகமாக நடைபெறுவதற்காக அந்த சந்தேகப் பேர்வழிகள் கையூட்டுகளை வழங்கிவருவது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

அந்த கும்பல் லஞ்சப் பணத்தை இடைத்தரர்களாக செயல்படும் சந்தேகப் பேர்வழிகளின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை பட்டுவாடா செய்துவிடுவதாகவும் அதன் பின்னர் அப்பணம் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கிற்கு இடைத்தரகர்கள் பட்டுவாடா செய்வதும் தெரியவந்துள்ளது.

அந்த நான்கு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதை MACC யின் சட்டவிரோத பண பரிமாற்றப் பிரிவின் இயக்குநர் டத்தோ முகமட் ஜம்ரி உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!