Latestமலேசியா

‘The Curve’ பேரங்காடியிலும் கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவு

பெட்டாலிங் ஜெயா, அக் 17 – கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பல பேரங்காடிகளில் கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அந்த பட்டியலில் தற்போது The Curve பேரங்காடியும் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த பேரங்காடியில் உள்ள Foot Solutions கடையின் பணியாளருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்த பேரங்காடியின் நிர்வாகம் அறிக்கை வழி நேற்று தெரிவித்துள்ளது.
அந்த பணியாளரின் நண்பருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொண்டபோது, அவர்களுக்கும் கோவிட் தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாகவும் அந்நிர்வாகம் கூறியுள்ளது.

அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு வீட்டில் தனித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கோவிட் தொற்றூ இல்லை என இரண்டாவது பரிசோதனையில் தெரிய வந்தால் மட்டுமே மீண்டும் வேலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

அந்த பேரங்காடி முழுவது தூய்மைப்படுத்தும் பணிகள்ம் மேற்கொள்ளப்பட்ட பிறகே இன்று மீண்டும் காலை 10.00 மணிக்கு திறக்கப்பட்டுள்ளதாக அந்நிர்வாகம் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!