Latestஉலகம்

WHO அனைத்துலக குழுவினர் வூஹான்  சென்றடைந்தனர்

பெய்ஜிங், ஜன 14 – பல மாதங்களாக நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப்  பின்னர், WHO –அனைத்துலக விசாரணைக் குழுவினர், சீனா வூஹான் சென்றடைந்திருக்கின்றனர்.

பத்து ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய அக்குழுவினர், சீனாவின் ஆராய்ச்சிக் கழகங்கள், மருத்துவமனைகள்,   கோவிட் -19 வைரஸ் பரவிய இடமாக கருதப்படும்  வூஹான் சந்தை ஆகியவற்றைச் சேர்ந்த தரப்புகளிடமிருந்து தவல்களைத் திரட்டுவார்கள்.

அக்குழுவினர் தங்களது விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பாக, தொற்றின் முன்னெச்சரிக்கையாக  இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வர்.
கோவிட்-19 வைரஸ்  எந்த விலங்கிலிருந்து பரவியது என்பதைக் கண்டறிவதும் இந்த விசாரணைக் குழுவினரின் நோக்கமாக உள்ளது.இவ்வேளையில் உலகம் முழுவதும் பரவியிருக்கும் கோவிட் -19 வைரஸ், வூஹானிலிருந்து பரவவில்லை என சீனா கூறி வருகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!