Latest

‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்

ஈப்போ, ஜூலை 22 – தனது சமையல் காணொளியிலின் மூலம் யூ.டி.யு.ப்பில் நாட்டு மக்களிடையே பிரபலமடைந்த எஸ்.பவித்ராவின் கணவர் எம்.சுகுவை போலீசார் கைது செய்து 3 நாட்கள் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

மனைவியை அடித்து கொடுமைபடுத்தியது தொடர்பில் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் சுகுவை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். நேற்று ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை காணச் சென்றுள்ளார். அப்போது சுகு மதுபோதையில் அரிவாளுடன் மருத்துவமனையில் புகுந்து தகராறு புரிந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் 1958 –ஆம் ஆண்டின் அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் 6(1) விதியின் கீழ் சுகு விசாரிக்கப்பட்டு வருவதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மாடி அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

மேலும், அண்மையில் “IPOH CITY ICON” எனப்படும் ஈப்போ மாநகர் மன்றத்தின் அடையாளம் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட போது எஸ்.பவித்ரா, கணவர் எம்.சுகுவின் பெயரை குறிப்பிடாததால் அவர் இவ்வாறு நடந்துக் கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என அஸ்மாடி அப்துல் அசிஸ் கூறினார். இத்தகைய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமுக வலைத்தளவாசிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் போது தனது சமையல் கலைகளை ‘youtube-யில் பதிவேற்றம் செய்து பிரதமர் மற்றும் நாட்டு மக்களின் பாராட்டை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!