Latestஉலகம்விளையாட்டு

ஃபின்லாந்தில் ஆர்டிக் பொது விருது பூப்பந்துப் போட்டியில் பின்னியெடுக்கும் பெர்லி-தீனா; இரண்டாவது பொது விருது பட்டம் நெருங்குகிறது

ஃபின்லாந்து, அக்டோபர்-13,

ஃபின்லாந்தில் நடைப்பெறும் ஆர்டிக் பொது விருது (Artic Open) பூப்பந்து போட்டியில் நாட்டின் முதல் தர மகளிர் இரட்டையர் பெர்லி தான்- எம்.தீனா இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.

அரையிறுதி ஆட்டத்தில் மூன்றாம் தர ஜோடியாகக் களமிறங்கிய பெர்லி-தீனா இருவரும், இரண்டாம் நிலை ஜோடியான ஜப்பானிய வீராங்கனைகளை மூன்று செட்களில் வீழ்த்தினர்.

1 மணி 42 வினாடிகள் நீடித்த ஆட்டத்தில், 21-19, 19-21, 26-24 என்ற புள்ளிக்கணக்கில் அவர்கள் போராடி வென்றனர்.

இறுதியாட்டத்திற்குத் தகுதிப் பெற்றிருப்பதன் மூலம் இவ்வாண்டு தங்களின் இரண்டாவது பொது விருது பட்டத்தைப் பெர்லி-தீனா நெருங்கி வருகின்றனர்.

கடந்த மாதம் நடைபெற்ற ஹோங் கோங் பொது பூப்பந்து போட்டியில் பலம் வாய்ந்த சீன ஜோடியைத் தோற்கடித்து, இருவரும் வெற்றியாளர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதியாட்டத்திலும் மலேசியாவின் சவால் தொடருகிறது.

அதில் தேசியத் தொழில்முறை ஆட்டக்காரர்களான Goh Sze Fei-Nur Izzuddin Rumsani, நடப்பு வெற்றியாளரான டென்மார்க் ஜோடியைச் சந்திக்கின்றனர்.

இருவரும் அரையிறுதி ஆட்டத்தில், சீனாவைச் சேர்ந்த முதல் தர வரிசை ஜோடியை 3 செட்களில் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!