Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

ஃபுளோரிடாவில் விமானத்தின் தரையிறங்கும் கியர் பகுதியில் 2 சடலங்கள் கண்டெடுப்பு

நியூ யோர்க், ஜனவரி-8 – அமெரிக்காவின் நியூ யோர்க்கிலிருந்து ஃபுளோரிடா சென்ற JetBlue விமானத்தின் தரையிறங்கும் கியர் பகுதியில், 2 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Fort Lauderdale விமான நிலையத்தில் தரையிறங்கியதும் வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அச்சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

எனினும் இதுவரை அவை அடையாளம் காணப்படவில்லை.

இருவரும் கியர் பகுதிக்குள் எப்படி நுழைந்தார்க்ள் என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக அவ்விமான நிறுவனம் அறிக்கையொன்றில் கூறியது.

மேற்கொண்டு தகவல் எதனையும் அது தெரிவிக்கவில்லை.

கடந்த டிசம்பர் 24-காம் தேதி சிக்காக்கோவிலிருந்து ஹவாய் தீவுகளில் ஒன்றுக்குப் புறப்பட்ட United Airlines விமானத்தின் கியர் பகுதியில், இதே போன்று ஒரு சடலம் கண்டுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தையச் சில சம்பவங்களில் கள்ளக்குடியேறிகள் விமானத்தின் கியர் பகுதிக்குள் அத்துமீறி ஆபத்தான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!