
கோலாலம்பூர், செப் 12 – துணைப்பிரதமர் அகமட் ஸாஹிட்டி ஹமிடி மீதான ‘Yayasan Akal Budi’ ஊழல் குற்றச்சாட்டு மீட்டுக்கொள்ளப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அதனை விவாதிப்பதற்கு போதுமான கால அவகாசத்தை தாம் வழங்கியிருப்பதாக மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் இன்று தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் ஆறு நாட்களிலும் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குத் தாம் அனுமதி வழங்கவிருப்பதாக அவர் கூறினார். இது குறித்து தீர்மானத்தைத் தாம் நேற்று நிராகரித்ததால் நாடாளுமன்றத்தில் அமளி துமளி ஏற்பட்டதாகவும் 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால மறு ஆய்வைப் பிரதமர் தாக்கல் செய்யவிருந்ததால் தாம் எதிர்க்கட்சியினர் தாக்கல் செய்த தீர்மானத்தை நிராகரிப்பதற்கு நியாயமான காரணம் இருந்ததாக ஜொஹாரி தெரிவித்தார்.
சிறப்பு கூட்டம் தொடர்பான விவகாரத்தின்போது இதர விவகாரங்களை விவாதிப்பது மீதான தீர்மானம் கடந்த காலங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையை பின்பற்றிதாம் தாம் அந்த தீர்மானத்தை நேற்று தள்ளுபடி செய்ததாக Johari கூறினார். தாம் ஏற்கனவே தெரிவித்ததைப் போல் இப்போது ஸாஹிட் ஹமிடி மீதான குற்றச்சாட்டு மீட்டுக்கொள்ளப்பட்டது குறித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு போதுமான அவகாசத்தை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.