Latestமலேசியா

அகமட் ஸாஹிட் மீதான குற்றச்சாட்டை நிருபிக்க தவறிய அரசு தரப்பு பதில் அளிக்க வேண்டும்; எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை

கோலாலம்பூர், செப் 24 – அகமட் ஸாஹிட் மீதான லஞ்ச குற்றச்சாட்டை நிருபிக்கத் தவறியதில் தோல்வி கண்ட அரசு தரப்பு அதற்கு பதில்கூற வேண்டுமென Bagan DAP நாடாளுமன் உறுப்பினர் Lim Guna Eng மற்றும் PKR Lembah Pantai நாடாளுமன்ற உறுப்பினர் Fahmi Fadzil ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸாஹிட்டிற்கு எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திரத்தை அரசு தரப்பு நிருபிக்க தவறிவிட்டதற்கு சட்டத்துறை தலைவர் அலுவலகம் மற்றும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என DAP யின் தலைவருமான லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தில் சட்டத்துறை தலைவருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் அரசு தரப்பு பதில் அளிக்க வேண்டுமென பி.கே.ஆர் கட்சியின் தகவல் பிரிவு தலைவருமான Fahmi Fadzil வலியுறுத்தினார்.

உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக சட்டத்துறைத் தலைவர் மேல் முறையீடு செய்ய வேண்டுமென பாசீர் கூடாங் பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!